கனடாவில் முதற்கட்டமாக திறக்கப்படும் சர்வதேச எல்லைகள்….!

0
US Customs officers stand beside a sign saying that the US border is closed at the US/Canada border in Lansdowne, Ontario, on March 22, 2020. - The United States agreed with Mexico and Canada to restrict non-essential travel because of the coronavirus, COVID-19, outbreak and is planning to repatriate undocumented immigrants arriving from those countries. (Photo by Lars Hagberg / AFP)

கனடாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மட்டுமே விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கிட்டத்தட்ட 16 மாதங்களுக்குப் பிறகு, முதற்கட்டமாக எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி முதல் அமெரிக்கா உடனான சர்வதேச எல்லைகளை திறக்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.

அன்று முதல் அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

எதிர் வரும் செப்டம்பர் 7-ஆம் திகதி முதல் மற்ற நாடுகளுக்கு இடையான சர்வதேச போக்குவரத்து தடை நீக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கனடாவுக்குள் நுழையும் பயணிகள் தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.

முழுமையாக தடுப்பூசி போடாத எந்த வெளிநாட்டு பயணிகளும் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என திங்கட்கிழமை அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here