கனடாவில் மீண்டும் கடுமையாக்கப்படும் ஊரடங்கு…!

0

கனடாவின் Ontario மாகாணத்தில் வரும் சனிக்கிழமை ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் அடுத்த 28 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு அறிவிக்கப்படவுள்ளது.

சுமார் 14 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட Ontario-வில் கடந்த வாரம் புதிதாக 2000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது மார்ச் மாத ஆரம்பத்தில் பதிவானதைவிட இருமடங்கு அதிகம் ஆகும்.

புதன்கிழமையன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 421-ஆக உயர்ந்துள்ளது.

அத்தியாவசிய கடைகள் 50 சதவீத பணியாட்களுடன் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

ஏப்ரல் 12 முதல் வாரம் வரை பள்ளிகள் திறந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் மற்ற கடைகள், ஜிம், சலூன், உணவகங்கள் போன்றவை மூடப்படும்.

கனடாவில் புதன்கிழமை நிலவரப்படி 982,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கிட்டத்தட்ட 23,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here