கனடாவில் மீண்டும் ஆட்சியை பிடித்தார் ஜஸ்டின் ட்ரூடோ ?

0

கனடாவில் நடந்து முடிந்துள்ள 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை அமைக்க போதுமான இடங்களை வென்றுள்ளது என சர்வதேச மற்றும் கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்த வெற்றியின் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாகவும் தொடர்ச்சியாக கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்த சேவைகள் குறிப்பிட்டுள்ளன.

எனினும், தேர்தல் வெற்றிகள் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் வாக்குகளை கணக்கிட்டு வருகின்றனர்.

கனேடிய நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரையில் ஒரு கட்சி பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்கு 338 இடங்களில் 170 இடங்களில் வெற்றி பெற வேண்டும்

எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியை விட 36 தொகுதிகளில் கூடுதல் வெற்றியைப் பெற்றுள்ளது. அதாவது 157 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

எனினும், சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்படுமா அல்லது பெரும்பான்மை அரசங்கம் அமைக்கப்படுமா என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை.

இதனிடையே பல கனேடிய ஊடகங்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்கும் என்று எதிர்வு கூறியுள்ளது.

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், தனது பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

மூன்றாவது முறையாகப் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

கடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால், ஜஸ்டின் ட்ரூடோவால் முக்கியச் சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனது.

அதனால் பெரும்பான்மை பெரும் நோக்கத்துடன் தேர்தலை நடத்த கடந்த மாதம் உத்தரவிட்டார். ஆனால், இந்த முறையும் அவர் நினைத்தபடி பெரும்பான்மை கிடைக்கவில்லை.

கடந்த தேர்தலில் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 155 இடங்களே கிடைத்தன.

இந்த முறை கூடுதலாக இரண்டு இடங்களில் முன்னிலையில் இருப்பதாக ஏபி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. எனினும், பெரும்பான்மைக்கு இது போதுமானதல்ல.

கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்திய வம்சாவளியைச் ஜக்மீத் சிங் தலைவராக இருக்கும் நியூ டெமாக்ரெட் கட்சி 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மேலும், இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும்போது தேவையற்ற வகையில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக ஜஸ்டின் ட்ரூடோ மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here