கனடாவில் மீண்டும் அதிகரிக்கும் பால் மா விலை!

0

கனடாவில் பால் மா விலை மீண்டும் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் பாலின் விலையை இரண்டு சதங்களினால் உயர்த்துவதற்கு கனேடிய பால்பொருள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பண்ணைப் பாலின் விலை ஒரு லீற்றருக்கு 2 சதங்கள்அல்லது 2.5 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் பாலின் விலை லீற்றருக்கு 6 சதங்களினால் உயர்த்தப்பட்டுள்ளது.

கனடாவில் பால் மாவின் விலை வருடாந்தம் ஒரு தடவை மீளாய்வு செய்யப்படும் நிலையில் இம்முறை இரண்டு தடவைகள் விலை அதிகரிப்பு பதிவாகின்றது.

நாட்டில் நிலவி வரும் பணவீக்கம் காரணமாக இவ்வாறு பாலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here