கனடாவில் வான்கூவர் தீவை சேர்ந்த 29 வயது இளம்பெண்ணான அமி குத்ரி கடந்த ஜூன் மாதம் 2 ஆம் திகதி காணப்பட்டுள்ளார்.
இதன்பின்னர் அமி காணாமல் போயிருக்கிறார்.
இந்நிலையில் அமி துரதிர்டவசமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்ட பொலிசார் அமி மரணத்தில் குற்றவியல் சந்தேகங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அப்பெண்ணின் மரணத்திற்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடந்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.