கனடாவில் மாணவியை கடத்த முயன்ற இளைஞன்…. பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

கனடாவில் மாணவியை கடத்த முயன்ற இளைஞனால் பரபரப்பு….

கனடாவில் ரொறன்ரோவில் உள்ள எட்டோகிகோக் பள்ளியின் வாசலில் மாணவிகள் இரு தினங்களுக்கு முன்னர் நின்றிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இளைஞன் 8 வயதான மாணவியை தனது தோளில் வைத்து தூக்கி கொண்டு கடத்த முயன்றான்.

இதை அங்கிருந்த மாணவ, மாணவிகள் பார்த்ததால் பயந்து போன இளைஞன் கடத்த முயன்ற மாணவியை கீழே இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறான்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இந்த சம்பவத்தில் குறித்த மாணவிக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

அவளை கடத்த முயன்ற இளைஞனுக்கு வயது 20 தாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் பெற்றோருக்கு தமது பிள்ளைகளை பாதுகாப்பான முறையில் பாடசாலை அனுப்புமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here