கனடாவில் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

0

கனடாவில் மருந்தகங்களில் பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இப்போது குழந்தைகளின் வலி மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகளுக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விநியோகப் பிரச்சனைகள் மோசமடைந்து வருகின்றது.

பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான மருந்துகள் குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

சில மருந்தகங்களின் அலமாரிகளில் குழந்தைகளுக்கான ஒவ்வாமை மருந்துகள், வயது வந்தோருக்கான இருமல் மற்றும் சளி சிரப், கண் சொட்டுகள் மற்றும் சில வாய்வழி நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் கூட இல்லை என்று தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைமை தீவிரமடைவதனால் மருந்தாளுநர்கள் மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் பல கனடியர்கள் கிளினிக்குகளில் அல்லது அவசர சிகிச்ச்சை பிரிவுகளில் பல மணித்தியாலம் காத்திருக்கிறார்கள் என கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here