கனடாவில் பொதுப் போக்குவரத்து பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

0

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பொதுப் போக்குவரத்தில் செல்வோருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தில் செல்வோர் கட்டணம் செலுத்தாது பயணங்களை மேற்கொள்ள முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்டணம் செலுத்தாது பயணங்களை மேற்கொள்வோருக்கு கூடுதல் தொகை அபராதம் விதிக்கப்படும்.

ஒன்றாரியோ பொதுப் போக்குவரத்து சேவையான கோ ட்ரான்சிட் (GO Transit ) இதனை தெரிவித்துள்ளது.

பயணிகள் தொடர்ச்சியாக கட்டண ஏய்ப்பில் ஈடுபட்டு பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்தால் அவ்வாறானவர்களுக்கு படிப்படியாக அபராத தொகையை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் தடவை கட்டணம் செலுத்தாதவர்களுக்கு 35 டொலர்களும், இரண்டாவது தடவைக்கு 50 டொலர்களும், மூன்றாம் தடவைக்கு 100 டொலர்களும் அபராதம் விதிக்கப்படும்.

நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட தடவைகள் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போது கட்டண ஏய்ப்பில் ஈடுப்பட்டால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 200 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும்.

நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் எனவும் 5000 டொலர்கள் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கட்டண ஏய்ப்பில் ஈடுபடுவதனால் பாரியளவு வருமான இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here