கனடாவில் பூனையை கொன்ற நபருக்கு நேர்ந்த கதி…

0

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் செல்ல பிராணியை கொன்றதாக ஒப்புக்கொண்ட நபருக்கு நான்கு மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எமையின் ஜூ என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வான்குவார் நீதிமன்றத்தினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி குறித்த பூனையை தாக்கிக் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மன அழுத்தம் காரணமாக இவ்வாறு பூனையை கொலை செய்ததாக குறித்த நபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகாலை வேளையில் தம்மை கடித்து கால் நகங்களால் கீறியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த தாம் பூனையின் வாலை பிடித்து சுவற்றில் பல தடவைகள் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

பூனையை சித்திரவதை செய்து கொலை செய்தமைக்காக குறித்த நபருக்கு நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

பூனையின் அலறல் சத்தம் கேட்டு அயலர்கள் பொலிஸாரிடம் முறைப்பாட்டு செய்தனர்.

அதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தி நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here