கனடாவில் புதிய கடுமையான ஊரடங்கு உத்தரவு!

0

கனடாவின் ஒண்டரியோவில் கொரோனாவின் 3வது அலையை குறைக்க புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவுள்ளது.

மக்கள் வீட்டிலேயே இருக்கும் படியான உத்தரவுக்கு ஒண்டரியோ தலைவர் Doug Ford’s அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வியாழக்கிழமை முதல் வீட்டிலேயே இருக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ள கட்டுப்பாடு சுமார் 4 வாரம் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரவை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அதே போல் மாகாணத்தில் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படும்.

மளிகை கடை மற்றும் மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்படுமாம். எனினும், பள்ளிகள் மூடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here