கனடாவில் புகலிடம் கோரும் அழகி….! காரணம் என்ன…?

0

மியான்மர் அழகிப்போட்டியில் வெற்றி பெற்றவரான Han Lay.

அவரது தாய்நாட்டில், ஆளும் இராணுவ ஆட்சியாளர்களால் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

ஆகவே, தாய்லாந்தில் அடைக்கலம் புகுந்திருந்த Han Lay கனடாவுக்குத் தப்பியோடியுள்ளார்.

அவர் கனடாவில் புகலிடம் கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021 ஆம் ஆண்டு, அழகிப்போட்டியின் இறுதிப்போட்டின்போது உணர்ச்சிகரமான உரை ஒன்றை ஆற்றிய Han Lay உலகின் கவனம் ஈர்த்தார்.

ஆளும் இராணுவ ஆட்சியாளர்களின் அராஜகங்களை வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதற்காக ‘மியான்மருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று கூறும் பதாகை ஒன்றை ஏந்தி Han Lay நிற்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின.

Han Layயின் உரையைத் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வரத்துவங்கின.

ஆகவே, அழகிப்போட்டி ஒன்றிற்காக தாய்லாந்து சென்ற Han Lay, பின்னர் நாடு திரும்புவதில்லை என முடிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து, Han Lay தாய்லாந்திலும் சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது.

இந்நிலையில், Han Lay, கனடாவுக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு அரசியல் புகலிடம் கோர உள்ளது.

தாய்லாந்து புலம்பெயர்தல் அமைப்பின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here