கனடாவின் Leduc என்ற இடத்தில் அமைந்துள்ள Christ the King School என்ற பள்ளியில் பயிலும் Jennifer Winkler (17) என்ற மாணவியை, அதே பள்ளியில் பயிலும் Dylan Pountney (19) என்ற மாணவர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
உடனடியாக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி Jennifer உயிரிழந்தார்.
சம்பவம் நடந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்குப்பின் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த Dylanஐ பொலிசார் கைது செய்தனர்.
Dylanம் Jenniferம் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களுக்கிடையே என்ன உறவு, ஏன் Dylan வகுப்பறையில் வைத்தே Jenniferஐக் கத்தியால் குத்தினார் என்பது போன்ற தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.