கனடாவில் பறவைக் காய்ச்சல்… கொல்லப்படும் பறவைகள்

0

கனேடிய மாகாணமான Nova Scotiaவில் பறவைக் காய்ச்சல் பரவிவருகின்றது.

மேற்கு Nova Scotiaவில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கிருக்கும் 12,000 வான்கோழிகள் கொல்லப்பட உள்ளதாக கனேடிய உணவு ஆய்வு ஏஜன்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறவைக் காய்ச்சல் என்று அழைக்கப்படும் Avian influenza, வேகமாக பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும்.

அந்த குறிப்பிட்ட பண்ணையில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, அதன் அருகில் சுமார் 10 கிலோமீற்றர் தொலைவு வரை அமைந்துள்ள மற்ற பண்ணைகளுக்கும் நோய் பரவாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை கனேடிய உணவு ஆய்வு ஏஜன்சியின் அட்லாண்டிக் பிரிவு மருத்துவரான Dr. Margaret McGeoghegan தெரிவித்துள்ளார்.

ஆனால், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பண்ணை எது என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here