கனடாவில் பரவும் ஜாம்பி நோய்… மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

கனடாவில் உள்ள மான்களுக்கு இடையே நாள்பட்ட விரய நோய் Chronic Wasting Disease (CWD) என்ற நோய் பரவி வருகின்றது.

இதனை அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு எவ்வித சிகிச்சையோ, தடுப்பூசியோ இல்லை என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தொற்று 1960ம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது.

கொலராடோ, கன்சாஸ், மின்னிசோட்டா உள்ளிட்ட 26 மாகாணங்களில் இந்த தொற்றுநோயின் தாக்கம் இருந்தது.

கடந்த 1996ம் ஆண்டு கனடாவில் முதன்முதலாக சஸ்காட்செவனில் உள்ள மான் பண்ணையில் இந்த தொற்று பரவியது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் அதன் மூளையின் கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றது.

அதிக உமிழ்நீர் சுரப்பு, அசாதாரண நடத்தை, எடை இழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிகுறிகளினால், இந்நோய் ஜாம்பி நோய் என குறிப்பிடப்படுகிறது.

அதேசமயம் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட விலங்களின் இறைச்சியை உண்பதாலும், பாதுகாப்பற்ற முறையில் கையாள்வதாலும், மனிதர்களுக்கும் இந்த தொற்று பரவலாம என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் முடிந்தவரை இறைச்சியை பாதுகாப்பாக கையாள்வதுடன், ரப்பர் கையுறைகளை பயன்படுத்துமாறும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here