கனடாவில் நீட்டிக்கப்படும் அவசரநிலை….

0

கனடாவில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது.

இந்த கொவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி, டிரக் டிரைவர்கள் மூன்று வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தால், அமெரிக்கா – கனடாவின் பல எல்லைகள் மூடப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தகப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தலைநகர் ஒட்டாவாவில், நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடந்தது.

இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, அவசர நிலை பிரகடனத்திற்கு, கனேடிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

இதனால், அமைதியை சீர்குலைக்கும் வகையில் போராட்டம் நடத்துவோரை கைது செய்து, அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க, அரசுக்கு அதிகாரம் கிடைத்தது.

இதையடுத்து, போராட்டம் சற்று நிறுத்தப்பட்ட நிலையில் சாலை தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

இந்நிலையில், மேலும் அவசர நிலை அதிகாரத்தை மேலும் நீட்டிக்கும் தீர்மானம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த தீர்மானம் தொடர்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில்,

”ஒட்டாவாவின் புறநகர் பகுதிகளில் பதுங்கியுள்ள டிரக் டிரைவர்கள், மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதனால், அவசர நிலை அதிகாரத்தை நீட்டிக்க ஆதரவு தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து நடந்த ஓட்டெடுப்பில், மொத்தமுள்ள 185 எம்.பி.,க்களில், தீர்மானத்திற்கு ஆதரவாக, 151 எம்.பி.,க்கள் வாக்களித்தனர்.

இதைத் தொடர்ந்து, தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here