அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான முக்கிய எல்லையை லொறி சாரதிகள் முடக்கியுள்ளனர்.
போராட்டம் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஒன்ராறியோவில் உள்ள அம்பாசிடர் பாலம் வழியாக அமெரிக்கா நோக்கி செல்லும் வாகன போக்குவரத்தானது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
டெட்ராய்டில் இருந்து கனடா செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அம்பாசிடர் பாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபடும் லொறிகள் மற்றும் அதன் சாரதிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வணிக நிறுவனங்கள் முன்வைத்துள்ளன.
தலைநகர் ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் லொறி சாரதிகள் தற்போது முக்கிய சாலைகளை முடக்கி வருகின்றனர்.
அம்பாசிடர் பாலம் மட்டுமின்றி மொன்டானா மற்றும் ஆல்பர்ட்டா இடையே மற்றொரு எல்லைக் கடக்கும் சாலையும் முடக்கப்பட்டுள்ளது.
அம்பாசிடர் பாலம் ஊடாகவே அமெரிக்கா- கனடா இடையே ஆண்டுக்கு 30% வரையிலான வர்த்தகம் முன்னெடுக்கப்படுகிறது.
முக்கிய போக்குவரத்து பாதைகளை லொறி சாரதிகள் தற்போது முடக்கியுள்ள நிலையில், இது உண்மையில் கவலைக்குரிய செயல் என கனடாவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் Omar Alghabra தெரிவித்துள்ளார்.