கனடாவில் நடந்த விசித்திர திருமணத்தால் தமிழர்கள் பேரதிர்ச்சி

0

கனடாவில் பாரம்பரியமான சடங்குகளுடன் ஐயர் முன்னிலையில் தாலி கட்டி இரண்டு பெண்கள் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் தமிழர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கனடாவில் உள்ள இரு தமிழ் பெண்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில், அம்மி மித்து, அருந்ததி பார்த்து, தாலிகட்டிக்கொண்டனர்.

ஓர்பால் ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்ய கனடாவில் தடையில்லை.இந்த சம்பவத்திற்கு பிற்போக்கு கலாச்சாரவாதிகள் பலர் கொந்தளித்து வருகின்றனர். இது இயற்கைக்கு முரணானது என்றும் இப்படி பெண்கள் திருமணம் செய்துக் கொண்டால் குழந்தை எப்படி பெற்றுக் கொள்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும் இது உலகம் அழிவதற்கான அறிகுறி என்றும் கூறத் தொடங்கிவிட்டனர்.
அதற்கு பதிலடியாக ஓர்பால் ஈர்ப்பு என்பது இருபால் ஈர்ப்பு போன்று இயல்பானது என மருத்துவம் கூறும் அறிவியல் விளக்கத்தையும், இனப்பெருக்கத்திற்காக மட்டுமே இருபால் கலாச்சாரத்தை காலம்காலமாக பின்பற்றி வந்ததாகவும் விளக்கம் அளித்தனர்.

மேலும், அவர்களுக்கு பிடித்த வாழ்வை வாழ முழு உரிமையும் அவர்களுக்கு உள்ளது எனவும், அதைக் கேள்விக் கேட்க யாருக்கும் உரிமையை கிடையாது எனவும் பதிலடி கொடுத்துள்ளனர்.

இங்கு உருவாகி நீடித்திருக்கும் கலாச்சாரம் பழமையானது என்பதால், புதிதாக வரும் மாறுதல்களுக்கு அதிர்ச்சியடைவது இயல்பு தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here