கனடாவில் துப்பாக்கி சூடு தாக்குதல்… இந்திய மாணவருக்கு நேர்ந்த கதி

0

கனடாவில் சுரங்க ரயில் நிலைய பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.

அதில் இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்பவர், டொரண்டோவில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு மேலாண்மைத்துறை பயின்று வந்தார்.

கடந்த வியாழக்கிழமை ஷெர்போர்ன் சுரங்க ரயில் நிலைய பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கார்த்திக் வாசுதேவ் கொல்லப்பட்டதாக கனடாவிற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொலைக்கான காரணம் தெரியவில்லை என கார்த்திக்கின் உறவினர் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here