கனடாவின் ஒட்டாவோ நகரில் நகரில் உள்ள வர்த்தக கட்டடத்தில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.
அதில் ஏற்பட்ட தீப்பரவலில் ஆறு பேர் வரை மரணித்திருக்கலாம் என
அஞ்சப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில், காணாமல்போன சிலரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்