கனடாவில் மிகவும் பரபரப்பான பியர்சன் சர்வதேச விமான நிலையமானது பராமரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே அடுத்த சில மாதங்களுக்கு மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் இணைய பக்கத்தில் குறித்த தகவலானது வெளியிடப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகளானது ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும்.
இதனால் சுமார் 7 மாத காலம் குறித்த விமான நிலையமானது மூடப்பட்டிருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
1960களில் கட்டப்பட்ட 3 கி.மீ ஓடுதளமானது காலப்போக்கில் சேதமடைந்துள்ளது.
தற்போது அதை முழுமையாக பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பியர்சன் சர்வதேச விமான நிலைய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் வரலாற்றில் மிகப்பெரிய ஓடுதள பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவது இதுவே முதன்முறை.
மூன்று கட்டமாக முன்னெடுக்கப்படும் இந்த பராமரிப்பு பணிகள் அனைத்தும் எதிர்வரும் நவம்பர் மாத மத்தியில் முடிவடையும்.
இந்த விவகாரம் தொடர்பில் ஏப்ரல் 7 ஆம் திகதி பொதுமக்களுடனான சந்திப்பு ஒன்றையும் விமான நிலைய நிர்வாகம் முன்னெடுக்கப்படவுள்ளது.