கனடாவில் தடுப்பூசி போடாதவர்கள் மீது வரி அறவீடு

0

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் தடுப்பூசியைப் போட மறுக்கும் பெரியவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகையை வரியாக வசூலிக்க திட்டமிட்டுள்ளது.

கியூபெக் பிரீமியர் Francois Legault தெரிவிக்கையில்,

பூசி போடாதவர்கள் மற்றவர்கள் மீது நிதிச் சுமையை ஏற்படுத்துகிறார்கள்.

மேலும் தடுப்பூசி போடாத குடியிருப்பாளர்கள் செலுத்த வேண்டிய குறிப்பிடத்தக்க தொகையை மாகாண நிதி அமைச்சகம் நிர்ணயம் செய்ய இருக்கிறது.

அத்தகைய தொகை 100 கனேடிய டொலாருக்கு குறைவாக இருக்காது.

மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி போடாதவர்களுக்கு இது பொருந்தாது.

வைரஸை எதிர்த்துப் போராட தடுப்பூசி முக்கியமானது. அதனால்தான் மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக தடுப்பூசி போட மறுக்கும் பெரியவர்களுக்கு வரி விதிக்க இருக்கிறோம் என Legault கூறினார்.

மாகாணத்தில் சுமார் 10% தடுப்பூசி போடப்படாதவர்கள் இருந்தாலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களில் 50% தடுப்பூசி போடாதவர்கள் என்று Legault கூறினார்.

சுகாதார அவசரநிலையின் பின்னணியில் அத்தகைய வரி வசூலிப்பு நியாயப்படுத்தப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here