கனடாவில் சுமந்திரன்,சாணக்கியனுக்கு கடும் எதிர்ப்பு

0

கனடாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் கலந்துகொண்ட கூட்டத்தில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் கூட்டம் இடைநிறுத்தப்பட்டு அங்கிருந்து அவர்கள் இருவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் கலந்துகொண்ட, கனடிய தமிழர்களுக்கான பொதுக் கூட்டத்தில் சாணக்கியனின் உரையை அடுத்து சுமந்திரன் உரையாற்ற ஆரம்பித்தார்.

அப்போது அங்கு இருந்த மக்கள் கேள்விகளை கேட்பதற்கு முயற்சித்தனர் அப்போது குழப்பநிலை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து, கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது இதனால் பொதுக் கூட்டம் இடை நிறுத்தப்பட்டு சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஏற்பாட்டாளர்களால் அங்கிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேவேளை, தமிழ் இன உணர்வாளர்கள் மண்டபத்துக்கு வெளியே பதாதைகளை தாங்கியவாறு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here