கனடாவில் தாம் செலுத்தி வந்த பஸ்ஸை நிறுத்தி விட்டு வீதியை கடக்க முயற்சித்த பெண் பஸ் சாரதி வாகனமொன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
49 வயதான குறித்த பெண் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
79 வயதான சாரதியொருவர் செலுத்தி வந்த வாகனத்தில் மோதுண்டு குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
வேகமாக செலுத்தி வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து குறித்த பெண் மற்றும் அருகாமையில் இருந்த கட்டடம் மீது மோதியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.