கனடாவில் கோர விபத்து! பெண் ஒருவர் பலி

0

கனடாவில் ரிச்மண்ட் ஹில்லில் நேற்று காலை 7.30 மணியளவில் மூன்று வாகனங்கள் ஒரே நேரத்தில் விபத்துக்குள்ளானது.

அங்குள்ள நெடுஞ்சாலையில் டிரக் லொறி ஒன்று வந்த நிலையில் இரண்டு கார்களும் வந்தது.

அப்போது ஏற்பட்ட விபத்தில் மூன்று வாகனங்களும் மோதி கொண்டன.

இதில் ஒரு காரில் இருந்த பெண் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மற்றொரு காரில் இருந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இசசம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் கூறலாம் என தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here