கனடாவில் கோர விபத்து….! ஒருவர் பலி

0

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் Guelph பகுதியில் வெலிங்டன் மற்றும் பிசி வீதிகளுக்கு அருகாமையில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டு வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பிக்கப் ட்ராக் ஒன்றும் பயணிகள் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டது.

பயணிகள் வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செலுத்தியவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

விசாரணைகளை நடத்தும் நோக்கில் குறித்த வீதியை தற்காலிகமாக பொலிசார் மூடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here