கனடாவில் கொரோனா தடுப்பூசியால் பெண் ஒருவருக்கு நேர்ந்த கதி…

0

கனடாவில் பைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா உள்ளிட்ட நான்கு தடுப்பூசிகள் அனுமதி அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கனடாவின் நார்த் யார்க் பொது மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.

95 வயதான பிரெண்டா வேலன் எனபவர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மார்ச் மாத ஆரம்பத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவருக்கு அங்கே கொரோனா தடுப்பூசி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரெண்டா வசித்துவரும் சுகாதார மையத்தில் அவருக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மகள் சிந்தியா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரெண்டா வேலன் எழுந்து நடமாட முடியாமல், சாப்பிடவோ பேசவோ முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார்.

பிரெண்டாவுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசி எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்ற தகவல் இதுவரை தெளிவாகவில்லை.

மட்டுமின்றி, பிரெண்டாவின் தற்போதை முடக்க நிலை, அவருக்கு அளிக்கப்பட்ட மூன்றாவது டோஸ் தடுப்பூசியால் ஏற்பட்டதா என்பது தொடர்பிலும் விளக்கமில்லை.

இந்த விவகாரம் தொடர்பில் யார்க் பொது மருத்துவமனை நிர்வாகம் எந்த கருத்தையும் தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here