கனடாவில் குழந்தைகள் பருவமடைவதைத் தடுக்கும் மருந்துகள் வழங்கப்படுகின்றது.
இந்நிலையில் குழந்தைகள் பருவமடைவதைத் தடுக்கும் மருந்துகளை பயன்படுத்துவதை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் Vancouver-ஐ சேர்ந்த ஆர்வலர் Chris Elston மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
Montreal நகரத்திலே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட Chris Elston கூறுகையில் Montreal நகரில் உள்ளூர்வாசி ஒருவருடன் உரையாடும் போது திடீரென முகங்களை மறைத்தப்படி வந்த ஒரு பெண் உட்பட 7 பேர் கும்பல், என்னை சரமாரியாக தாக்கினர்.
கும்பல் தாக்கியதில் எனது கையில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
பருவமடைதல் தடுக்கும் மருந்துகளை குழந்தைகள் பயன்படுத்தக்கூடாது என தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக Chris Elston ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.