கனடாவில் குறைந்து வரும் புகைப்பழக்கம்…. நிபுணர்கள் விளக்கம்

0

கனடா அரசு, பல ஆண்டுகளாக புகைத்தலுக்கு எதிராக செய்துவந்த பிரச்சாரத்துக்கு, கொரோனா உதவியிருக்கிறது.

கொரோனா காலகட்டத்தில், கனடாவில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டில் பெற்றோர் இருக்கும்போது, வீட்டை விட்டு வெளியே போய் சிகரெட் பற்றவைக்கத் தோன்றும்? நியாயம்தானே, என்கிறார் Waterloo பல்கலைக்கழக பொது சுகாதாரத்துறை பேராசிரியரான David Hammond.

2020 டிசம்பருக்கும் 2021ஜனவரிக்கும் இடையில், 8,112இடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பாக 20 முதல் 24 வயது உள்ளவர்களில் 5 சதவிகிதம் அளவுக்கு புகை பிடித்தல் குறைந்துள்ளது.

ஆக, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில், பலர் பல்வேறு காரணங்களுக்காக புகையிலை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர்.

கொரோனா காலகட்டத்தில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என Hammond தெரிவித்துள்ளார்.

அவை குறுகிய காலத்துடன் முடிவடைந்துவிடுமா அல்லது அவற்றின் தாக்கம் நீண்ட காலத்துக்கு இருக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here