கனடாவில் காணாமற்போன யாழ் யுவதி மரணம்!

0

கனடாவில் காணாமல் போன யாழ் யுவதி பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவர் கடந்த 16ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

குறித்த யுவதி கடைசியாக ஜனவரி 16, 2022 அன்று இரவு 7:45 மணிக்கு ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் பகுதியில் காணப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.

 பிரசாந்தி  16/ 01/ 2022 அன்று இரவு 7:45 மணிக்கு தனது காதலனுடன் பொழுது போக்க பூங்காவில்  நடைப்பயிற்சியில் சென்றவர்கள் அங்கே இருந்த சிறிய குளம் snow கடும்  பனிமலையால் கண்ணாடிபோல் நீர்  உறைந்திருந்தது.

காதலன் விளையாட்டுத்தனமாக நடந்து பார்த்த போது நீருக்குள்ளே சென்று விட்டார் அவரை காப்பாற்ற எடுத்த முயற்சியில் இருவரும் உறைந்த நீருக்குள்ளே உயிரை பறிகொடுத்துள்ளார்கள். இறுதியாக இவர்கள் நடமாடிய  பகுதியில் பொலிசார் CCரீவி கமராவில் தேடிய போது உறைந்த நீருக்குள்ளே இருந்து இருவரின் உடல்களை மீட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here