கனடாவில் கணவனை கொடூரமாக குத்தி கொலை செய்த மனைவி கைது

0
Male hand with bloody knife against the white floor with puddles of blood. Stabbing. Kill with a knife.

கனடாவில் ரொறன்ரோவில் கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

டான் மில்ஸ் சாலையில் இருந்து பொலிசாருக்கு வந்த தகவலையடுத்து அங்கு அவர்கள் சென்றனர்.

அங்கு கா சாய் ஹோ 75 வயது என்பவர் கத்தி குத்தி காயங்களுடன் கிடந்த நிலையில் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார்.

அங்கு சாய் ஹோவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சாய் ஹோவின் மனைவி பாக் லின் பவுலின் 62 வயது என்பவரை பொலிசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் பொலிசார் சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here