கனடாவில் கடும் வெப்ப நிலை

0

கனடாவின் மேற்கு பகுதியிலும் மற்றும் அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கு பகுதியிலும் கடும் வெப்ப அலை தாக்கியுள்ளது.

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லிட்டன் பகுதியில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிதுள்ளது.

இப்பகுதியில் சராசரியாக 46.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

கடந்த 84 வருடத்தில் பதிவான வெப்ப நிலையை இம்முறை வீசிய வெப்ப அலை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது, சஸ்காட்செவன் மாகாணத்தின் யெல்லோ கிராஸ் மற்றும் மிடேல் ஆகிய இரு நகரங்களில் 1937 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதிவான 45 டிகிரி செல்சியஸை விட அதிகரித்த வெப்ப நிலையாகும்.

லிட்டன் மட்டுமன்றி பிரிட்டிஷ் கொலம்பியாவில் 40 க்கும் மேற்பட்ட பிற இடங்கள் வெப்பநிலை புதிய சாதனைகளை படைத்துள்ளது.

வெப்ப அலைகள் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் அதிர்வெண் அதிகரிக்கும் என்று காலநிலை மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here