கனடாவில் கடும் வெப்ப நிலை….. பலி எண்ணிக்கையில் அதிகரிப்பு!

0

கனடாவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளது.

கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகவும் குளிரான நாடுகளில் ஒன்றான கனடாவில் தற்போது வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது.

கடும் வெப்பத்தால் தார் பாதைகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ளளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதீத வெப்பத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைநகர் விக்டோரியாவிலிருந்து 155 கிலோமீற்றர் தொலைவிலுள்ள லிட்டன் என்ற கிராமத்தில் அண்மையில் அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு வீதியோரங்களில் நீர்த்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here