கனடாவில் ஒரே ஒரு சாலடை சாப்பிட்ட குழந்தைக்கு நேர்ந்த கதி….

0

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Nathan Parker 2018ஆம் ஆண்டு, முதன்முறையாக கனடாவுக்கு வெளியே தன் குடும்பத்தை சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.

Nathan Parker, Karla Terry தம்பதி, தங்கள் இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவிலுள்ள டிஸ்னிலேண்டுக்கு சென்றிருந்தார்கள்.

அப்போது, கலிபோர்னியாவிலுள்ள சாலையோரக் கடை ஒன்றில் சாலட் ஒன்றை சாப்பிட்டுள்ளான் தம்பதியரின் மகனான Lucas.

அந்நேரத்தில், கனடாவிலும் அமெரிக்காவிலும் ஈ கோலை என்னும் ஒரு கிருமி வேகமாக பரவியுள்ளது.

35 பேர் அந்த கிருமியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

அப்போது இரண்டு வயதாக இருந்த Lucasம் உடல் நலம் பாதிக்கப்படதால், உடனடியாக கனடா திரும்பியுள்ளது Lucasஇன் குடும்பம்.

அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நேரத்தில், அவனது சிறுநீரகங்களில் ஒன்று செயலிழந்து போனதும், அவனது மூளையில் இரண்டு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Lucasஆல், நடக்கவோ, பேசவோ, பார்க்கவோ முடியாமல் போய்விட்டது! இப்போது ஐந்து வயதாகும் Lucasக்கு, உணவு கூட, குழாய் மூலம்தான் கொடுக்கப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் காரணம், அந்த சாலடில் இருந்த லெட்டூஸ் என்னும் கீரை. அந்த கீரையில் இருந்த ஈ கோலை என்னும் கிருமிதான் Lucasஇன் வாழ்வையே முடக்கிப்போட்டு, அவனது குடும்பத்தின் மகிழ்ச்சியையே மொத்தமாக விழுங்கிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here