கனடாவில் ஒரு கோர சம்பவம்… சக மாணவியை கொன்ற மாணவன்….

0

அமெரிக்காவில், சிறுமி ஒருத்தியைக் கொலை செய்ததாக 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

அதனை தொடர்ந்து தற்போது கனடாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கனடாவில் Leduc என்ற இடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் பயிலும் Jennifer Winkler (17) என்ற மாணவியை சக மாணவர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

Jennifer உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதிலும் காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Jenniferஐ கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 19 வயது மாணவர் ஒருவர் ஓரிடத்தில் மறைந்திருந்த நிலையில், பொலிசார் அவரைக் கைது செய்துள்ளார்கள்.

கொலையுண்ட Jenniferம் கொலை செய்த மாணவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி மூடப்பட்டுள்ளது.

பொலிசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here