கனடாவில் இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த கதி…!

0

கனடாவில் மில்டன், பிரேடானியா வீதியில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

28 வயதுடைய கனடிய இளைஞர் ஓட்டிய கெடிலெக் வாகனத்தில் இலங்கையர்கள் ஓட்டி சென்ற வாகனம் மோதி விபத்து இவ்வாறு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த அத்துல கருணானந்த என்பவரே இந்த வாகனத்தை செலுத்தியுள்ள நிலையில் அதில் அவரது மனைவியும் மகளும் பயணித்துள்ளனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய கனேடிய இளைஞன் குடிபோதையில் இருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த மகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

விபத்திற்கு காரணமாக இருந்த 28 வயதுடைய இளைஞன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here