கனடாவில் வான்கூவரில் செங்குத்தான பாறையின் உச்சியில் இருந்து கீழே விழுந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
அங்குள்ள லைட்ஹவுஸ் பூங்காவுக்கு 70 வயதான முதியவர் மாலையில் சென்றிருக்கிறார்.
அப்போது அங்கிருந்த செங்குத்தான பாறையில் இருந்து அவர் கீழே விழுந்தார்.
அங்கிருந்து தண்ணீரில் விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாறை மீது நின்று புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போதே கால்தடுக்கி அவர் விழுந்திருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளார்.
முதியவரின் சடலம் கைப்பற்றப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.