கனடாவில் இந்திய இளைஞருக்கு நேர்ந்த கதி

0

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள மில்ட்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.

அதில் காயமடைந்த இந்திய இளைஞர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

திங்கட்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொலிசாரான Andrew Hong (48) மற்றும் Shakeel Ashraf (38) என்னும் இருவர் கொல்லப்பட்டார்கள்.

மேலும் மூன்று பேர் காயமடைந்தார்கள்.

காயமடைந்தவர்களில் இந்தியரான சத்விந்தர் சிங் (Satwinder Singh, 28 ஒருவராவார்.

சத்விந்தரின் தந்தை, துபாயில் ட்ரக் சாரதியாக பணிபுரிகிறார்.

மகன் சுடப்பட்ட செய்தி அறிந்த அவர் மகனைக் காண கனடாவுக்கு வந்துள்ளார்.

கோவிட் காலகட்டத்துக்கு முன்புதான் அவர் கடைசியாக தன் மகனை பார்த்துள்ளார்.

இந்நிலையில், சத்விந்தர் பிழைக்க வாய்ப்பில்லை என்று கூறி மருத்துவர்கள் அவருக்கு அளிக்கப்பட்டுவந்த செயற்கை சுவாசத்தை, அவரது உறவினர்கள் அனுமதியுடன் நிறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், தாக்குதல்தாரியான Sean Petrie (40) பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவர் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here