கனடாவில் அவசரகால நிலை பிரகடனம்

0
OTTAWA, ON - FEBRUARY 05: Supporters of the truckers against vaccine mandates implemented by Canadian Prime Minister Justin Trudeau, hold up Canadian flags as they gather near Parliament Hill on February 5, 2022 in Ottawa, Canada. Truckers continue their rally over the weekend near Parliament Hill in hopes of pressuring the government to roll back COVID-19 public health regulations and mandates. (Photo by Minas Panagiotakis/Getty Images)

கனடாவில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.

பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போர் தடுப்பூசி சான்றிதழை கொண்டிருப்பதனையும் கனடா அரசு கட்டாயமாக்கியது.

பாரவூர்தி சாரதிகளுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரவூர்தி சாரதிகள், தலைநகர் ஒட்டாவாவில் உள்ள பிரதான வீதிகளில் பாரவூர்திகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரகால நிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

1970ஆம் ஆண்டுக்கு பிறகு கனடாவில் அவசரகால சட்டம் அமுலுக்கு வந்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here