கனடாவில் அரங்கேறிய கொடூரம்…. பழங்குடி குழந்தைகளின் கல்லறைகள்!

0

கனடாவின் சஸ்காட்சுவான் மாகாணத்தில் ஃபோர்ட் பெல்லி (Fort Pelly) மற்றும் செயின்ட் பிலிப்ஸ் (St Phillip’s) உறைவிடப்பள்ளிகளுக்கு அருகில், தரையில் ஊடுருவிச் செல்லும் ரேடாரைப் பயன்படுத்தி கல்லறைகளைத் தேண்டப்பட்டது.

கீசீகூஸ் ஃபர்ஸ்ட் நேஷனின் (Keeseekoose First Nation’s) தேடுதலுக்குத் தலைமை தாங்கும் டெட் கியூவெசான்ஸ் (Ted Quewezance),செய்தியாளர் சந்திப்பில் புதிதாக 54 பழங்குடி குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டார்.

1905 முதல் 1913 வரை செயின்ட் பிலிப்ஸ் மற்றும் 1928 முதல் 1969 வரை ஃபோர்ட் பெல்லி ஆகிய இரண்டு பள்ளிகளும் கனேடிய அரசின் சார்பாக கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்பட்டன.

இதே போன்ற பழங்குடி குழந்தைகளின் கல்லறைகள் கடந்த ஆண்டு கனடா முழுவதும் உள்ள பல உறைவிடப் பள்ளிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

கீசீகூஸ் ஃபர்ஸ்ட் நேஷனின் தலைவர் லீ கிட்செமோனியா, இந்த குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியும் என்றும் கூறினார்.

மேலும், இது குறித்து விசாரணை தேவை என்று பரிந்துரைத்தார்.

1800-களின் பிற்பகுதியிலிருந்து 1990-கள் வரை சுமார் 150,000 First Nations, Metis மற்றும் Inuit பிஸ்ன்ஹகுடிகளின் குழந்தைகள் இந்த உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.

பல மாதங்கள் அல்லது வருடங்கள் தங்கள் குடும்பங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் தங்கள் கலாச்சாரம் மற்றும் மொழி பறிக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களால் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.

இது 2015-ல் வெளிவந்த “கலாச்சார இனப்படுகொலை” என்ற அறிக்கையின் முலம் தெரியவந்தது.

கனடாவில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here