கனடாவில் அடுக்குமாடி வீட்டை அல்லேக்காக தூக்கி சென்ற தம்பதிகள்!

0

கனடாவில் வேறு நகரத்திற்கு குடிபெயர்ந்த தம்பதிகள் தங்கள் வீட்டையும் பெயர்த்து ஆற்றில் இழுத்து சென்ற சம்பவம் வைரலாகியுள்ளது.

உலகம் எங்கும் மக்கள் பலர் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு, நகருக்கு.. ஏன் நாட்டிற்கு கூட குடிபெயர்ந்து செல்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது தாங்கள் முன்னதாக தங்கியிருந்த ஊரில் சொத்துகள் அல்லது வீடுகள் இருந்தால் திரும்ப வரமாட்டோம் என்ற நிலையில் அவற்றை விற்றுவிடுவது அல்லது வேறு யார் பொறுப்பிலாவது கொடுத்துவிட்டு செல்வது போன்றவற்றை செய்வார்கள்.

ஆனால் கனடாவில் ஒரு தம்பதி வேறு நகரத்திற்கு குடிப்பெயர வீட்டையும் பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். மனைவியின் ஊரில் குடியேற அந்த தம்பதிகள் முடிவுசெய்த நிலையில் தாங்கள் ஆசை ஆசையாய் கட்டிய இரண்டு மாடி வீட்டை விட்டு செல்ல மனமில்லையாம். அதனால் வீட்டை மிதக்கும்படி தயார் செய்து ஆற்றில் படகுகள் உதவியுடன் தள்ளிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here