கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், ஜனவரி 31 ஆம் திகதியில் சேகரிக்கப்பட்ட Oysters என்னும் சிப்பி உணவில், norovirus என்னும் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
அதை உண்ணவேண்டாம் என கனேடிய அதிகாரிகளும், அமெரிக்க அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அது அமெரிக்காவில் பல இடங்களில் நோய்த்தொற்றை உருவாக்கியமை தெரியவந்துள்ளது.
கனடாவில் உற்பத்தி செய்யப்பட்ட அந்த சிப்பிகள் அமெரிக்காவின் 13 மாகாணங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த norovirus பொதுவாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது அல்ல.

அது தொற்று ஏற்படுத்தும் மூன்று நாட்களில் கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் பாடாய்ப்படுத்திவிடும்.
ஆகவே, அந்த காலகட்டத்தில் வாங்கப்பட்ட சிப்பிகளை பயன்படுத்தவேண்டாம் எனவும் அவற்றை தூர எறிந்துவிடுமாறும் அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
