கனடாவிற்கு பயணிக்க வேண்டாம் என எச்சரிக்கும் அமெரிக்கா…!

0

கனடாவில் ஒமிக்ரான் மாறுபாடு பரவல் காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது.

கனடாவிற்கு பயணிக்க வேண்டாம் என நாட்டுமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.

இதன் மூலம் கனடாவுக்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என CDC அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

CDC, சுமார் 80 இடங்களை அதன் நான்காம் நிலையில் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், அமெரிக்க வெளியுறவுத்துறையும் கனடாவிற்கான அதன் பயண பரிந்துரையை நான்காம் நிலைக்கு உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here