கனடாவிற்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

0

கனடாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

கனடா வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிவிப்பில்,

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கனடா வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.

மற்றவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற சான்றிதழைக் கனடாவில் நுழைவதற்கு முன்னர் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கனடாவில் கொரோனா தடுப்பூசிகளை வேகமாகச் செலுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக கனடாவில் 61% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பு மருந்து பெருமளவு செலுத்தப்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here