கனடாவிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் முக்கிய அறிவிப்பு

0
FILE PHOTO: Canada's prime minister, Justin Trudeau, attends a news conference at Rideau Cottage, as efforts continue to help slow the spread of the coronavirus disease (COVID-19), in Ottawa, Ontario, Canada January 19, 2021. REUTERS/Blair Gable/File Photo

கொரோனா வைரஸ் இப்போது பல்வேறு விதங்களில் உருமாறி பரவி வருகிறது.

குறிப்பாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ், அதி தீவிரமாக பரவும் தன்மை கொண்டுள்ளது.

ஒரு சில நாடுகளில் இப்போது வரை கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது,

இந்நிலையில், பிரித்தானியாவைப் போன்று கனடாவும் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இது குறித்து அந்நாட்டு பிரதமர் ஜஸ்ட்டி ட்ரூடோ, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வெளிநாட்டு பயணிகளுக்கு தங்கள் நாட்டிற்குள் அனுமதி வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகளும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

அதன் படி தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு பயணிகள் மட்டும் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்காலிக நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கப்போவதில்லை.

எதிர்வரும் காலங்களில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கனடாவில் தற்போது 2 கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here