கந்தல் பொம்மைக்கும் பிரேசில் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை….!

0

பிரேசிலில் உள்ள 37 வயதுடைய பெண் வீட்டில் தயாரிக்கப்பட்ட கந்தல் பொம்மையை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இப்போது, இந்த விசித்திர ஜோடிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ் (Meirivone Rocha Moraes) என்ற அந்த பெண்ணுக்கு, மார்செலோ (Marcelo) என்ற பொம்மையை அவரது தாயார் அறிமுகப்படுத்தினார்.

அந்தப் பெண்ணுக்கு நடனக் கூட்டாளி இல்லை என்பதை அறிந்து அவர் அதை உருவாக்கி கொடுத்துள்ளார்.

மார்செலோ மோரேஸின் வாழ்க்கையில் வந்ததும், தனது வாழக்கை முழுமையடைந்ததாக்க உணர்ந்துள்ளார்.

மார்செலோ ஒரு நடன கூட்டாளி என்பதை விட பெரிதாக நினைத்தார்.

மார்செலோ ஒரு பொம்மை என்பதை மறந்து தனது வாழ்க்கைத்துணையாகவே நினைத்து, காதலித்து திருமணம் செய்து கொண்டார் மோரேஸ்.

பொம்மை வாதிடவோ சண்டையிடவோ மாட்டாது.

எப்போதும் தன்னை புரிந்துகொள்வதால், தன்னை எப்போதும் விரும்பும் மனிதன் அவன்தான் என்று மோரேஸ் தெரிவித்துள்ளார்.

“மார்செலோ ஒரு சிறந்த மற்றும் உண்மையுள்ள கணவர் என தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பொம்மை உள்ளது.

அது இந்த குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினராக இணைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here