இந்தோனேசியாவில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் அருகே மர்ம நபர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.
குறித்த திடீர் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக பலர் காயங்களுடன் தப்பியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளான இன்று கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில் மக்காசர் நகரத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு தாக்குதல் நடக்கும்போது பக்தர்கள் அனைவரும் தேவாலயத்தின் உள்ளே இருந்ததாக தெரிய வந்துள்ளது.
மேலும், தாக்குதல்தாரி பக்தர்கள் நடுவே செல்ல முயன்ற நிலையில், பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த நபர் வெடிகுண்டை அங்கேயே வெடிக்க செய்துள்ளார்.
இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதுடன், 10 கும் குறைவானவர்கள் காயங்களுடன் தப்பியதாக கூறப்படுகிறது.