கண் பார்வை மங்குவாக நினைத்த நபருக்கு நேர்ந்த விபரீதம்…!

0

பிரித்தானியாவின் ஸ்டாஃபோர்ட்ஷயர் பகுதியை சேர்ந்தவர் 55 வயதான டேவிட் பவலுக்கு மூளையில் டென்னிஸ் பந்து அளவுக்கு புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

11 மணி நேரம் நீண்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் அது அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

டேவிட், நீண்ட 6 ஆண்டுகளுக்கு பின்னர், கண் பார்வை மங்குவதாக கூறி கண் மருத்துவரை நாடியுள்ளார்.

அவர் விரிவாக சோதனை மேற்கொண்டதில் அவருக்கு பார்வை நரம்புகள் வீங்கியிருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக பொதுமருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

பொதுவாக பார்வை நரம்புகள் வீங்கினால் வலி இருக்கும்.

ஆனால் டேவிட் அப்படியான எந்த அறிகுறியும் தமக்கு ஏற்படவில்லை, பார்வை மட்டுமே மங்கியதால் மருத்துவரை நாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரது மூளையில் இருந்து டென்னிஸ் பந்து அளவுக்கு கட்டி ஒன்றை மருத்துவர்கள் நீண்ட 11 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் அப்புறப்படுத்தியுள்ளனர்.

தற்போது படிப்படியாக குணமடைந்து வருவதாக கூறியுள்ள டேவிட், மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here