கண்டி வைத்தியசாலை மருத்துவர்ளால் சாதிக்கப்பட்ட சத்திர சிகிச்சை

0

மரத்திலிருந்து விழுந்தால் முதுகெலும்புக்கு கடுமையாக சேதமடைந்த 60 வயதான கொரோனா தொற்றாளருக்கு அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

உடலில் ஒக்ஸிஜன் அளவு குறைவாக இருந்ததுடன் மயக்கமடைய செய்ய முடியாத கட்டத்தில் கடும் அவதானமிக்க நிலையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கண்டி வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சுனந்த உடகெதர தலைமையிலான குழுவினரால் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3 மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த சத்திர சிகிச்சையில் 6 விசேட வைத்தியர்கள் பங்கேற்றனர்.

இந்த நபருக்கு கொரோனா தொற்றியிருந்ததுடன், அவரது உடலில் ஒக்ஸிஜன் அளவு நூற்றுக்கு 80 வீதம் குறைவடைந்திருந்துள்ளது.

அவரை மயக்கமடைய செய்து சத்திரசிகிச்சை செய்வதென்பது விசேட காரணம் ஒன்றாகும் என விசேட வைத்தியர் சுனன்ந்த உடகெதர தெரிவித்துள்ளார்.

ஏணி ஒன்றின் உதவியுடன் பலாக்காய் பறிக்க சென்ற போது கீழே விழுந்தமையினால் குறித்த நபரின் முதுகெலும்பு பாரிய சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அதுவரையில் அவரது பாதங்கள் செயலற்ற நிலையில் காணப்பட்டமையினால் சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட குறித்த நபருக்கு ஒக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டுள்ளது.

இருப்பினும் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது அவர் குணமடைந்து வருவதாக மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here