கண்டி திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 600 பேருக்கு நேர்ந்த கதி!

0

கண்டி பிரதேச ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டதாக கூறப்படும் சுமார் 600 பேர் திடீரென சுகவீனமடைந்துள்ளனர்.

கங்கவத்தகோரளை பிரதேச சபையின் சுகாதார திணைக்களம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன் அந்த ஹோட்டலில் மூன்று திருமணங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் அந்த மூன்று திருமணங்களிலும் கலந்து கொண்ட சுமார் அறுநூறு பேர் வாந்தி, பேதி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .

இது தொடர்பில் கங்கவத்தகோரளை உள்ளுராட்சி சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் : ​​ஹோட்டலில் உணவு உண்டவர்களுக்கு ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

ஹோட்டலின் நீரால் இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கக்கூடும் என ஊகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹோட்டலின் நீர் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here