கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்…. சந்தேக நபர் கைது

0

இலங்கையில் கண்டி, தெல்தெனிய பகுதியில் பொலிஸார் சுற்றிவளைக்க முயன்ற போது சந்தேக நபர் கோடரியால் தாக்க முற்பட்டுள்ளார்.

அதனால் குறித்த சந்தேக நபரின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகன -ஹம்பகாவத்த பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸ் குழுவொன்று குறித்த பகுதிக்குச் சென்றது.

இந்நிலையிலேயே குறித்த தாக்குதல் இடம்பெற்றது.

இதன்போது அங்கிருந்த மேலும் நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தெல்தெனியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல்கள், கால்நடை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியந்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களுள் சிறைச்சாலையில் இருந்து தப்பி வந்த கைதி ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

மேலதிக விசாரணைகள் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here